எதோ என்னமோ என்று நினைக்க வேண்டாம். நீங்கள் கோயில் புணருத்தாரனம் என்று கொடுக்கும் பணமெல்லாம் அக்கோயில்களின் பழமையையும் சான்னித்தியத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் ஜிஹாதைவிட இந்த ஜிஹாத் ஊர்தோறும் நடந்து வருகிறது.
Frequently asked questions (FAQs):
Frequently asked questions (FAQs):
1. கோயில் பழசாயிட்டுதே! பழைய கோயிலை புதுக்குவதுன்னா, பழமை மாறாமல் அதனை repair செய்வது. அதைவிட்டுவிட்டு இடித்துத்தள்ளிவிட்டு புது கோயில் கட்டுவதல்ல. பழசை இடிப்பதினால் முன்னோர்களின் சாபமும், பழைய சான்னித்தியமும் காணாமல் போவதோடு அகால மரணங்கள் ஏற்படும் என்பது கண்கூடு. கோயிலை இடித்து கட்டிவிட்டு...ஐயையோ ஆண்டவனே கோயில் வேலையெல்லாம் செய்தாரே இப்படி ஆயிட்டுதே! high dramaவெல்லாம் வேண்டாம். Reach foundation
என்று ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு உங்கள் உதவிக்கு உள்ளது. (ஏனுங்கோ...பழசானாத்தானே கோயிலுக்கு மருவாதை?!?)
2. பக்தர்களுக்கு வசதி செய்து தர்றேன்...ஹி....ஹி...ஹிகோ+இல் = கோயில்...சாமி வீடு. ஆகம பிரகாரம்தான் அச்சு பிசகாமல் இருக்கணும்... யார் வீட்ட யார் வசதிக்காக யார் மாத்துறது? முன்னோர்களுக்குத் தெரியும் என்ன வசதி செய்யணும்..எது வேண்டாம்னு. கோயில் சாமி வீடு. கல்யாண மண்டபமல்ல. உதாரணமாக கல்யாணப்பெண்ணுக்குப் periods என்றால் உள்ளே போகக்கூடாதல்லவா! கல்யாணம் பண்ண வேண்டியது உங்கள் "இல்"இல். சாமி "இல்"இல் அல்ல. பழைய முறைமைகளை செய்யாமல் விடுவதுதான் தவறு. புதுமைகளைப் புகுத்துவதும் தவறு. ஒழுங்காக ஒரு உள்ளூர் நாட்டு மாடு கோ+ இல் = உள்ளூர் நாட்டுமாட்டுவீடு என்றும் பொருள். நல்ல மாடுகளை வாங்கி அவற்றை அன்பாக அனைவரும் பராமரித்து கட்டாமல் பட்டியிட்டு அமைத்து பராமரித்தால்தான், கோயில் என்ற ஆத்ம விஞ்ஞானக் கூடத்திற்குத்தேவையான இடுபொருட்களான விபூதி, பஞ்சகவ்யம், நெய், தயிர், பால், சாணம், கோஜலம், மோர் ஆகியவை கிட்டும். இவற்றைப் பிரசாதமாக விநியோகித்தாலதான் ஊரில் நோய்நொடி இருக்காது. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது, "temple இல்லாத ஊரில்" என்று பொருளல்ல "பசுவீடு இல்லாத ஊரில்" என்று உள்ளார்ந்த பொருள். விபூதி என்ற பேரில் பாறைப்பொடி, குங்குமம் என்ற பேரில் red dyes, சந்தனம் என்ற பேரில் மரத்தூள், தேன் என்ற பேரில் சக்கரைத்தண்ணி....இதுதானாடா உங்கள் "பக்தர்கள்களுக்கு வசதி மண்ணாங்கட்டி?". ஆனா செவுத்துக்கு கிரானைட், சாமி கண்ணுமேலயே அடிக்கும் போகஸ் லைட் போன்ற கண்றாவிகளுக்கு கொறச்சலில்ல. அனைத்து பக்தர்களும் சற்றுநேரமவது டீவி என்ற மாயலோகத்தில் மதியிழப்பதற்குப் பதில், கோபரிபாலனத்தைப் போட்டிபோட்டுக்கொண்டு முறைவைத்து செய்யவேண்டும். அலுங்காமல், குலுங்காமல் செலுத்தப்படுவது பக்தியல்ல! அது தமோகுணத்தின் வெளிப்பாடே! அதேபோல் வயதான மாடுகள் விற்கப்படலாகாது. அவை விபூதி, அர்க்கம் தயாரிக்கப் பயன்படும்.
நாட்டுப்பசுவினைக் கொல்வது, கொல்லும் வீணர்களுக்கு விற்பது, கொன்ற பசுக்கள் பொருட்களை (பெல்ட், பர்ஸ், ஷூ, பேக், டாலோ – இன்று பல ஹோட்டல்களில் நெய்க்குப்பதிலாக பயன்படுத்தப்படும் பசுக்கொழுப்பு) விற்பது, வாங்குவது ஆகியவை கோஹத்தி எனும் மஹாபாதகமாகும். இதனைச் செய்தாரது குடும்பங்கள் படிப்படியாக க்ஷீணப்படும் என்பது நிதர்சனம். பசு, காளைகள் எக்காரணம்கொண்டும் விற்கப்படலாகாது. அதிகமானால் பிறகோயில்களுக்கோ, அல்லது பக்தர்களுக்கோ அவை வழங்கப்படலாம். பசுதெய்வத்தை ஏலம் விடும் போக்கிரித்தனம் ஆகவே ஆகாது. கோயிலில் சிறிது நேரம் தெய்வீகமான குழலோசை மட்டும் இசைக்கலாம். ஆயிரம் நாமம் பெற்ற அச்சுதன் கோவிந்தனே பசுக்களுக்காக குழலிசைத்தானல்லவா! மேலும் இயன்றால் பக்தர்கள் குழுவொன்றினை அமைத்து, கோயில் நிலத்தில் கோயிலில் பயன்படும் அனைத்து பொருட்களையும் உள்ளூர் நாட்டுரக பயிர் வித்துக்களையும், பசுவி்னையும்கொண்டு, இயற்கைமுறையில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யலாம் (உதாரணம்: நெல், பருப்பு வகைகள், எண்ணை வித்துகள், மஞ்சள், மூலிகைகள், சந்தனம், புளி போன்று). இவ்வாறு செய்தால் அவ்வூர் சுவர்க்கபுரியாகும் என்பதில் ஐயமில்லை! கோயில் இவ்வாறாக சனாதனமாயினால் (sustainable) ஊரும் தானாக சனாதனமாகும். அறநிலையத்துறையையே நம்பியிராமல் பக்தர்களாக இதனைச்செய்யவேண்டும். ஏனெனில் பக்தர்களே பரமனின் குழந்தைகள். HR & CE புல்லுறுவி. காசு சம்பாதிக்கும் இயந்திரம். அரசன் கோயிலைக் கட்டினான். HR & CE governmentகாரன் துப்பாக்கியக்காட்டி வசூல் பண்ணி அதைவச்சே கோயிலை இடிக்கிறான்.
கோயில்களில் சீரியல்லைட், டியூப்லைட், ஸ்பாட்லைட் ஆகியவற்றைத்தவிர்த்து ஆகம விதிப்படி எண்ணை விளக்குகளும், கிரானைட், சிமென்ட்தளத்திற்குப்பதில் மூலிகை விருட்சங்கள், நந்தவனம், கோசாலையும், வீண் பகட்டுக்குப்பதில் கோயில் நிலங்களில் இயற்கைவிவசாய உற்பத்தி, அதன்மூலம் நித்திய அன்னதான சாலை ஆகியவை செய்தால்தான் புண்ணியம். பழைய கற்கோயில்களை இடித்துத்தள்ளிவிட்டு தாம்தூமென்று சிமெண்டில் பகட்டாகக் கோயில்கட்டாமல் உள்ளதனை உள்ளபடியே பராமரித்துக்கொண்டு மேற்கூறியவாறு செய்தால் இறைவன் பிரீதியடைவான்! ஒவ்வொரு கொயிலும் பழையவாறு ஆன்ம விஞ்ஞானக்கூடமாக வேண்டும். இது எவ்வளவு பணபலத்தாலும் முடியாது, பக்தர்களது ஆன்ம பலத்தாலும்,
பாரம்பரியத்தாலும் மட்டுமே இயலும்.
பாரம்பரியத்தாலும் மட்டுமே இயலும்.
3. ஆகம முறைகள் யாருக்குத் தெரியும்? வேலையில்லாத சிலர் தாந்தோணித்தனமா ஸ்தபதி, பணிக்கர் என்று போய், தாங்கள் சொன்னதை சாதிக்காமல் விடமாட்டார்கள். இன்றிருக்கும் ஸ்தபதிகள் பாரம்பரிய ஸ்தபதிகளா? இரண்டாவது உங்கள் பாரம்பரிய ஸ்தபதி யார்? அவர் எல்லாத்தையும் இடி, சாமி சிலையில் பிண்ணம், அதை ஆத்தில் வீசு, அப்பத்தான் எனக்கு வருமானம்னு நினைக்கிறது காதில் விழலையா? உங்கள் அப்பா அம்மா ஊணமாக இருந்தால் ஆத்திலதான் வீசுவீங்களா? வீசிட்டு நல்ல அப்பா அம்மா வாங்கிக்குவீங்களா? ஆகம முறைகளை அறிய உங்கள் குலகுரு, கோயில் பரம்பரை மணியம் (HR & CE போட்ட "பரம்பரை கிரம்பரை" nuisance காரைவேட்டிகளல்ல), தேர் மணியம், பூசாரி, ஸ்தானிக ஐயர், மாணிக்கத்தி, ஊர் பெரியவர்கள், காணியாளர்கள் என்று அனைவரையும் கூட்டி சபை அமைத்து குருவிடம் ஆகமங்களைக் கேட்டறிந்து செயல்படவேண்டும். குருவே தெய்வம். குருவிடம் idea கேளுங்கள்..... idea கொடுத்து சரியான்னு கேக்காதீங்க. See kongukulagurus.blogspot.com குலகுரு யாருன்னு தெரிலின்னா. இன்னொன்னு வாஸ்துவெல்லாம் கோயிலுக்குக்கிடையாது வாஸ்து கத்துக்குட்டிகளே! மனிதன் வஸிக்கும் சாஸ்திரமே வாஸ்து. ஆண்டவன் அருளுவதற்கு ஆகமமே! ஒவ்வொரு கோயிலுக்கும் பாரம்பரியம் உள்ளது. அதுபோலத்தான் செய்ய வேண்டும்.
கோயில் ஓவியங்கள் புணரமைக்க: சுரேஷ் (ஓவியர் ASI Rtd.): +91 94475 30385
கோயில் ஓவியங்கள் புணரமைக்க: சுரேஷ் (ஓவியர் ASI Rtd.): +91 94475 30385
4. யார் கோயில் வேலை செய்யலாம்? கரைவேட்டி, பொழப்பத்தவர்கள், ஜாலிக்காக செய்பவர்கள், சம்பந்தமில்லாதவர்கள் இவர்களெல்லாம் செய்தால் தவறுகள் நடந்து பல விபரீதங்கள் நடக்கும். எனவே மேலே சொன்னவர்கள்தான் இதனைச் செய்ய வேண்டும்.
அடுத்ததடவை எவனாவது கோயில்வேலை காசு வேணும்னு வந்தா........இதெல்லாம் சொல்லி இப்படி செஞ்சா காசு இல்லன்னா எங்க கோயிலை இடிக்கறயாடான்னு கேட்டு வாலை நறுக்குங்க.
No comments:
Post a Comment